இதுவும் அது. இ - ள். இவை ஆறு சொல்லும் முன்னிலை வினைச்சொற்கண் அசைநிலையாகி வரும், எ - று. எ - டு. கேண்மியா. தண்டுறை யூரயாம் கண்டிக. காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறு. 2). சென்மதி பெரும. மெல்லம் புலம்ப கண்டிகும். காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் (அகம். 7) என வரும். இவை கேள், காண், மொழி, செல், காண், பூண் என்னும் பொருட்கண் ஆய் என்பது திரிந்து வந்தன. (25)
|