ஆங்க என்பது உரையசையாதல்

273.ஆங்க உரையசை.

அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆங்க என்னுஞ்சொல் உரையிடத்து அசை நிலையாம், எ - று.

எ - டு. “ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி” எனவரும்.

(28)