ஒப்பில் போலியும் உரையசையாதல்

274.ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்.

இதுவும் அது.

இ - ள். ஒப்புக் குறியாத போல் என்னும் சொல்லும் உரையசையாம், எ - று.

எ - டு. அவர் வந்தார் போலும். இதனுள் வந்தார் எனத் துணிந்த வழி வருதலின், அசைநிலையாயிற்று.