ஏகார ஓகாரங்கட்கு வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நன்று, அன்று என்பவற்றின்கண் வரும் ஏகாரமும், அந்து, அன் என்பவற்றின்கண் வரும் ஓகாரமும், அத்தன்மைய பிறவும் மேற்கூறியவாற்றானன்றிக் குறிப்புப் பொருளோடும் ஏற்கும். உம்மை இறந்தது தழீஇயிற்று, எ - று. எ - டு. | சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை--நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக்கொண் டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. | (நாலடி-24.) |
இதனுள் நன்றே காண் என்பது தீதே காண் என்னுங் குறிப்புணர்த்திற்று. “நின்னையன்றே திருமுக்குடையாய்” என்றவழி அன்றே என்பது அல்லாமையைக் குறியாது முக்குடையானையே சுட்டி நின்று அவன் கேட்பது பயனாக வந்தது. “பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்--அன்னோ பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமி லறிவி னவர்” | (நாலடி-162.) |
என்பதனுள், அன்னோ என்பது அருள் குறித்து நின்றது. 2“வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப--அந்தோ வளியென் வந்தனென் என்ற” என்றவழி, அந்தோ என்பது கேடு குறித்து நின்றது. அன்ன பிறவுமாவன வந்தவழிக் கண்டுகொள்க. (33)
1. நன்றீற் றேயும் அன்றீற் றேயும் என்பது பிறர் கொண்ட பாடம். 2. புறம்-238.
|