உம்மைக்குரியதோர் புறனடை

279.எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.

உம்மைக்குரியதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இல, எ - று.

எ - டு. சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும், என்றவாறு.

(34)