எச்ச உம்மைக்கண் வழூஉக்காத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எஞ்சு பொருட்கிளவி, உம்மையில் சொல்லாயின், அவ்வும்மையை வருகின்ற சொல்லோடு கிளக்க, எ - று. எ - டு. சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் என்றற் பாலதன் கண் ஓர் உம்மை வரில், சாத்தன் வந்தான், கொற்றனும் வரும் என்க, சாத்தனும் வந்தான், கொற்றன் வரும் என்னற்க. (35)
|