இதுவும் உம்மைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். முற்றும்மைத் தொகைச்சொற் பொருண்மைக்கண் எச்சப் பொருண்மையும் உரித்து, எ - று.
ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை.
எ - டு. நின்கையிற் காணம் பத்துங் கொடால் - என்றவழிச் சிலகொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வராது.
(36)