உம், என என்பவற்றுக்குரிய முடிபு

283.உம்மை எண்ணும் எனவென் எண்ணும்
தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே.

எண்ணின்கட் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப்பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல, எ - று.

எ - டு. முத்தும் பவழமும் கொணர்ந்தான். நன்றெனத் தீதென நின்றது. முத்தும், பவழமும், பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான். நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது என இருபாற்றானும் வரும்.

(38)