இதுவும் அது: ஏகாரத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எண்ணுக்குறித்த ஏகாரம் சொற்றொறுங் கொள்ளாது ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ - று. எ - டு. தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, உறலோடாங் கைம் புலனென மொழிப என்புழி, இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது. (39)
|