இதுவும் அது இ - ள். உம் என்பது உந்து என விரிந்து நிற்கவும் பெறும் இடமும் உண்டு, எ - று. எ - டு. | “நெல்லரியு மிருந்தொழுவர செஞ்ஞாயிற்று வெயின்முனையிற் றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து திண்டிமில் வன்பரதவர் வெப்புடைய மட்டுண்டு தண்குரவைச் சீர் தூங்குந்து தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானன் முண்டகக் கோதை யொண்டொடி மகளிர் இரும்பனையின் குரும்பைநீரும் பூங்கரும்பின் றீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத்தாழைத் தீநீரோ டுடன்விராய் முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய” | (புறம்-24) |
என்றவழி உம் உந்தாயிற்று. எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதலான், இவ்வாறு வருவது ஓர் பொருண்மேல் உம்மை அடுக்கியவழி என்று கொள்க, ஈண்டு எண்ணும்மை யாங்கதெனின், ஒரு பொருண்மேல் பல வினைச்சொல் வருதலின், அவை ஒரு முகத்தான் எண்ணப்பட்டவாம். (43)
|