இஃது உரிச்சொற்களிற் சில சொற்பொருள் உணர்த்துமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்.
இ - ள். உறு, தவ, நனி என்று சொல்லப்பட்ட மூன்று சொல்லும் மிகுதி என்னும் சொல்லான் அறியப்படும் பொருளை உணர்த்தும், எ - று.
எ - டு. ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி-185): ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம் - 235); ‘வந்துநனி வருந்தினை வாழிய 2நெஞ்சே’ (அகம் - 19); இவை மிகுதி உணர்த்தியவாறு கண்டுகொள்க.
(3)
1. (பா - ம்.) அவைதாம் - என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரைகளில் இந்நூற்பா காணப்படுகிறது.
2. வாழியென்--வேறுபாடம்.