உரு என்பதன் பொருள்

296.3உருவுட் காகும்.

இ - ள். உரு என்னும் சொல் உட்கு என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘உருகெழு கடவுள்’ 1உட்குமிக்க கடவுள் என்றவாறு.

(4)


1. பதிற்-21

297.புரைஉயர் பாகும்.

இ - ள். புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும். எ - று.

எ - டு. ‘புரைய மன்ற புரையோர் கேண்மை.’ (நற்-க,)

(5)