குரு, கெழு என்பனவற்றின் பொருள்

298.குருவும் கெழுவும் நிறனா கும்மே.

இ - ள். குரு என்பதூஉம், கெழு என்பதூஉம் நிறம் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘குருமணித் தாலி,’ ‘செங்கேழ் மென்கொடி,’ (அகம்-80.) கெழு என்பது கேழ் எனவும் வரும்.

(6)