செல்லல், இன்னல் என்பனவற்றின் பொருள்

299.செல்லல் இன்னல் இன்னா மையே.

இ - ள். செல்லல் என்னும் சொல்லும், இன்னல் என்னும் சொல்லும் இன்னாமைப் பொருளில் வரும், எ - று.

எ - டு.2’மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’, ‘வெயில் புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு-374.)

(7)


1. அகம்-22.