மழ, குழ என்பனவற்றின் பொருள்

309.மழவும் குழவும் இளமைப் பொருள்.

இ - ள். மழ என்னும் சொல்லும், குழ என்னும் சொல்லும் இளமை என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘மழகளிறு’. (புறம்-38); ‘குழக்கன்று’ (நாலடி-101)

(17)