அதிர்வு, விதிர்வு என்பவற்றின் பொருள்

314.2அதிர்வும் விதிர்(ப்பு)ம் நடுக்கம் செய்யும்.

இ - ள். அதிர்வு என்பதூஉம், விதிர்வு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ - று.

எ - டு. ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை, அதிர வருவதோர் நோய்’ (குறள்-429); ‘விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம்-20).

(22)


1. ‘அதிழ்வு’ என்ற பாடமும் உளதெனச் சேனாவரையர் உரையால் தெரிகின்றது.