இ - ள். தீர்தல் என்னும் சொல்லும், தீர்த்தல் என்னும் சொல்லும் விடுதல் என்னும் பொருள் படும், எ - று.
எ - டு. ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற்றிணை: 108); இது தன்வினை. நோய் தீர்த்தான் என்பது பிறவினை-விடுத்தான் எனப்படும். இவ்வேறுபாட்டான் இரண்டாக ஓதினார்.
(24)