|
தட, கய, நளி என்பவற்றின் பொருள் | 318. | தடவும் கயவும் நளியும் பெருமை. |
| இ - ள். தட என்னும் சொல்லும், கய என்னும் சொல்லும், நளி என்னும் சொல்லும் பெருமை என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘தடக்கை’ (புறம்-394). ‘கயவாய்.’ (அகம்-118) ‘நளிமலை’ (புறம்-150). (26)
|
|