இ - ள். மேற் சொன்னவற்றுள், தட என்னும் சொல் கோடுதல் என்பதன் பொருண்மையும், கய என்னுஞ் சொல் மென்மை என்பதன் பொருண்மையும், நளிதல் என்பது செறிதல் என்பதன் பொருண்மையும் படும், எ - று.
எ - டு. ‘தடமருப்பெருமை’ (நற்-120); ‘கயந்தலைக்குழவி’; ‘நளியிருள்’.
(27)
1. இதனை மூன்று சூத்திரங்களாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள்.