இது மரபுவழுக் காக்கின்றது. இ - ள். பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழவேண்டும் இடத்தும். பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும். எ - று. வேதாகமத்துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும், பரமும், அனாதி; பதியும், பசுவும், பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறுங் காண்க. 1‘உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் எனவும் 2‘நோயும் இன்பமும்’ எனவும் கூறியவாறுங் காண்க. மன்னிக் கழிகின்றேன் என்றான்:--மன்னுதல் பொருத்தமும் மன்னாமை பொருந்தாமையுமானவாறுங் காண்க. இரண்டாவது ஏட்டிற்காணும் உரை. இதுவுமது. இ - ள். நிலையாத பொருள் உம்மை பெறல்வேண்டும், எ-று. அவையாவன இளமை, செல்வம், யாக்கை யென்பன. எ - டு. சக்கரவர்த்தி இளமையும் நிலையாது, சக்கரவர்த்தி செல்வமும் நிலையாது. சக்கரவர்த்தி யாக்கையும் நிலையாது. “ஏமமாக இந்நில மாண்டோர் சிலரே,” “பெருங்கேளினினாளும்-பலரே யத்தைஅஃ தறியா தோரே-அன்னோர் செல்வமும் மன்னி நில்லா” எனவரும். இல்லாப்பொருளென உரைப்பவாலெனின் இல்பொருள் வழக்கின்றென மறுக்க. உம்மை கொடாக்கால் வருங்குற்றம் என்னை யெனின், பிறரிளமையும் செல்வமும் யாக்கையும் நிற்குமெனப் பொருள்படு மாதலான் கொடுக்கவேண்டுமென்க. (32)
1. தொல். பொருளியல்-8. 2. தொல். பொருளியல்-2.
|