நம்பு, மேவு என்பவற்றின் பொருள்

325.நம்பும் மேவும் நசையா கும்மே.

இ - ள். நம்பு என்னும் சொல்லும், மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-198) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்.’ (மலைபடு-82)

(33)