ஓய்தல் ஆய்தல், நிழத்தல், சாஅய் என்பவற்றின் பொருள்

326.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

இ - ள். ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ - று.

எ - டு. ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7); ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி-96); ‘நிழத்த யானை மேய் புலம்படர’ (மது-303); ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல்-18).

(34)