படர் என்பதன் பொருள்
இ - ள். படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும் படும், எ - று.
எ - டு.‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி.’ (புறம்.47) இது நினைவு. ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந்-108) இது செலவு.
(44)