தாவு என்பதன் பொருள்

340.தாவே வலியும் வருத்தமு மாகும்.

இ - ள். தாவு என்னும் சொல் வலி என்பதன் பொருண்மையும், வருத்தம் என்பதன் பொருண்மையும் படும், எ - று.

எ - டு.‘தாவி னன்பொன் றைஇய பாவை.’ (அகம்-212..) இது வலி. ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’, (குறுந்-69.) இது வருத்தம்.

(48)