விறப்பு, உறப்பு, வெறுப்பு என்பவற்றின் பொருள்

343.விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.

இ - ள். விறப்பு என்னும் சொல்லும், உறப்பு என்னும் சொல்லும், வெறுப்பு என்னும் சொல்லும் செறிவு என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்’. ‘உறந்த விஞ்சி.’ ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’. (புறம்-53.)

(51)