கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்பவற்றின் பொருள்

345.

கம்பலை சும்மை கலியே யழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள.

இ - ள். கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ - று.

எ - டு.‘கம்பலை மூதூர்’ (புறம்-54); ‘ஒலிபெருஞ் சும்மையொடு’; ‘கலிகொளாயம் (அகம்-11); ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’(நற்-203)

(53)