அழுங்கல் என்பதற்கு மேலும் இருபொருள்
அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அழுங்கல் என்னும் சொல் இரக்கம் என்பதன் பொருண்மையும், கேடு என்பதன் பொருண்மையும் படும், எ - று.
எ - டு. ‘மகவீழ்ந் தழுங்கிய’--இஃது இரக்கம். ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறும்’ (நாலடி-353)--இது கேடு.
(54)