செழுமை என்பதன் பொருள்

348.செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.

இ - ள். செழுமை என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘செழும்பல் குன்றம்’--இது வளம். ’செழுந்தடி தின்ற செந்நாய்’--இது கொழுப்பு.

(56)