விழுமம் என்பதன் பொருள்

349.

1விழுமம்
சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும்.

இ - ள். விழுமம் என்பது சீர்மை என்பதன் பொருளும், சிறப்பு என்பதன் பொருளும், இடும்பை என்பதன் பொருளும் படும், எ - று.

எ - டு. ‘விழுமியோர்-காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.’ (நாலடி, 159)--இது சீர்மை. ‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து - (புறம்-27). இது சிறப்பு. ‘நின்னுறு விழுமங் களைந்தோன்’ (அகம்-170) இது இடும்பை.

(57)


1.விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் எனப் பாடங் கொள்வர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். ‘விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்’ என்பது இளம்பூரணர் பாடம்.