செப்பு வழுவமைதி

35.பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே.

செப்பு வழுவமைத்தலை நுதலிற்று மேலதற்கோர் புறநடை
எனினும் அமையும்.

இ - ள். வினாவப்பட்ட பொருளோடு புணராச் சுட்டுப் பெயரைச் சொல்லினும், பொருள் வேறுபடாது ஒன்றாம். எ - று.

இப்பயறல்லது இப்பட்டல்லது இல்லை 1என்னாது இவையல்லது இல்லை எனினும் பொருள் வேறுபடாவாறு கண்டு கொள்க.

(35)


1. 33, 34, 35 ஆம் சூத்திரங்களில், பட்டுப்பற்றிய வினாவிடைணங்கள் இரண்டாவதேட்டில் இல்லை.