துவைத்தல், சிலைத்தல், இரங்கல், இயம்பல் என்பவற்றின் பொருள்

354.

துவைத்தலும் சிலைத்தலும் 1இரங்கலும் இயம்பலும்
இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர்.

இ - ள். துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ - று.

எ - டு. ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு-315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி-46,) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர்-நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம்-36)

(62)


1. இயம்பலும் இரங்கலும் என்பது ஏனை உரையாளர் பாடம்.