இரங்கல் என்பதற்கு மேலும் ஒரு பொருள்

355.அவற்றுள்,
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும்.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ - று.

எ - டு. ‘செய்திரங் காவினை’ (புறம்-10.)

(63)