|
நொசிவு, நுழைவு, நுணங்கு என்பவற்றின் பொருள் | 370. | நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. |
| இ - ள். நொசிவு என்பதூஉம், நுழைவு என்பதூஉம், நுணங்கு என்பதூஉம், நுண்மை என்பதன் பொருள்படும், எ-று. எ - டு. நொசி மருங்குல்.1 நுழைநூற் கலிங்கம் (மலைபடு-561) நுணங்கிய கேள்வியர் (குறள்-419). (78)
1. குறிஞ்சிக் கலி. 24.
|
|