மத என்பதன் பொருள்

373.மதவே மடனும் வலியும் ஆகும்.

இ - ள். மத என்னுஞ் சொல் மடம் என்பதன் பொருண்மையும், வலியென்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று.

எ - டு. பதவுமேய்ந்த மதவுநடை நல்லான் (அகம்-14-காண்க). இது மடம். கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு, (அகம்-36). இது வலி. 

(81)