இ - ள். மேற் சொல்லப்பட்ட மத என்னும் சொல் மிகுதி என்பதன் பொருளும், வனப்பு என்பதன் பொருளும் படும், எ-று.
எ - டு. பொருநா கிளம்பாண்டி-றேரூரச் செம்மாந் ததுபோன் மதைஇனள்.1 இது மிகுதி. மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (அகம்-130) இது வனப்பு.
(82)
1. முல்லைக்கலி. 9.