இ - ள்.கடி என்னும் சொல் வரைவு முதலாக முன்றேற்றீறாக ஓதப்பட்ட பத்துச் சொல்லினும் தெளியத் தோன்றும் பொருளை யுடைத்து. எ-று. எ - டு. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம், முடிந்தாலும் பீழை தரும் (குறள்-658). இது வரைவு. கடுநுனைப் பகழி; இது கூர்மை, கடி என்னும் சொற்றானே கடு எனத் திரிந்து வந்தது. கடியில் புகூஉம் கள்வன்போல்; இது காவல். கடியுண் கடவுட்கிட்ட சிறுகுரல்-அறியாதுண்ட மஞ்ஞை. (குறு-105). இது புதிதுண் கடவுள். கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண்.1இது விரைவு. கடும் பகல் (அகம்-148) இது விளக்கம். கடுங்கா லொற்றலின். (பதிற்-25). இது மிகுதி. கடிகாவிற் பூச்சூடினன். இது சிறப்பு. கடும் பாம்பு வழங்குந் தெரு. (இஃதுவழங்குந் தெரு. (இஃது அச்சம். கடுஞ்சூ டருகுவ னினக்கே (அகம் 110)--நீ தெளியுமாறு சூளுறுகின்றேன். இது முன்றேற்று. (87)
1. புறம்-15.
|