சுட்டு முதலாகிய காரணக் கிளவியை வழங்குமாறு

38. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும்.

செப்பு வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். சுட்டெழுத்து முதலாகிய காரணச் சொல்லும், சுட்டுப்பெயர் இயற்கை போலப் பொருந்தத் தோன்றும், எ - று. என்றது பிற்படக் கூறப்படும், எ - று.

எ - டு. மழை பெய்தது, அதனால் யாறு பெருகும். பிறவும் அன்ன.

இது, சுட்டுப் பெயருள் அடங்காதோ எனின், பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், காரணக் கிளவி கருவியாதலானும் வேறு ஓதப்பட்டது.

(38)