எடுத்து ஓதப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் புறனடை
யுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பொருள்பெறச் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து. அவற்றிற்கியைந்த மொழியாற் புணர்ந்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும், எ-று.
எனவே பல பொருளொருசொல் வந்துழி, முன்னும் பின்னும் வந்த மொழியறிந்து, அதற்கொப்பப் பொருளுரைக்க என்றவாறாம்.