மாணாக்கர்க்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். உணர்ச்சி என்பது உணர்வு, வாயில் என்பது புலன், அஃதாவது உணரப்படுவது, உணர்வோர் வலித்து என்பது உணர்வோரது வலிமையுடைத்து. எ-று.
என்றது. பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்துகின்றவழி, பயின்றவாக ஓதப்பட்டன, யாதும் அறியாதாரை நோக்கின அல்ல; உணர்வினான் உணரப்படுவனவற்றை யுணர்வாரை நோக்கிக் கூறப்பட்ட என்றவாறு, எனவே மேற்கூறிய கடாவிடை பெற்றதாம்.
(97)