இதுவும் அது இ - ள். மன்னர் முதலாயினாராற் பெற்ற சிறப்பினால் ஆகிய பெயர்ச் சொற்கும், உம்மையான் நிலப்பெயர் முதலாகிய பெயர்க்கும் இயற்பெயர்ச் சொல்லை முற்படக் கூறார் ஆசிரியர், எ - று. சிறப்பினான் வந்தன:-ஏனாதி, வாயிலான்,படைத்தலைவன், அவை ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத்தலைவன் கீரன் என்பன. இக்காலத்து, உடையார், தேவர் என்பனவும் சிறப்பினான் ஆகிய பெயர். அருவாளன் சாத்தன், பாண்டியன் மாறன், முனிவன் அகத்தியன், ஆசிரியன் சாத்தன். பிறவும் அன்ன. (39)
|