அப்பொருளுணர்ச்சியும் உணர்வார்க்கே இயலும் எனல்

391.எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே,

எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கண முணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ஒரு சொற்கு அங்கமாகிய எழுத்துப் பிரிந்து நின்று பொருள்பட ஒலித்தல் இத்தமிழகத்தில் இல்லை, எ-று.

எனவே, மேல் எழுந்த கடா விடை பெற்றதாம். பொருட்குப் பொருள்தெரியின் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்துமாறாம்.

(99)