செய்யுளகத்துப் பொருளுணரச் சொற்றொடுக்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப: பொருள் மேல் மொழி புணர்க்கும் இயல்பு, எ - று.
செய்யுளகத்துத் திரிந்து பொருள்படுஞ்சொல் எடுத்தோதினார்: வழக்கின்கண் இயல்பாகிச், செய்யுட்கண்ணும் இயல்பாகி நடக்கும் பொருள்கள் ஓதவேண்டாமையின், அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.
(8)
1. மொழிபுணர் இயல்பே என்பது ஏனைய உரையாசிரியர்கள் கொண்ட பாடம்.