மேலதற்குப் புறனடை

404.1பொருடெரி மருங்கின்
ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரியுந்
தோற்றமும் வரையார் அடிமறி யான.

மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பொருள் ஆராயும் வழி ஈற்றடிக்கண் வரும் இறுதிச் சீர் ஈற்றயலடிக்கண் திரிந்து பொருள்படும் நிலைமையும் நீக்கார், எ - று.

இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. 

(12)


1. பொருடெரி மருங்கின் ஈற்றடி யிருசீர் எருத்துவயிற் றிரிபுந் தோற்றமும் வரையார் என்பதும் பாடம்.