திணை வழு வமைத்தலை நுதலிற்று. இ - ள். தன்மைப் பெயர்ச் சொல்லும் அஃறிணைப் பெயர்ச் சொல்லும் எண்ணுமிடத்தில் விரவுதல் நீக்கார், எ - று. எ - டு. யானுமென் னெஃகமும் சாறும் அவனுடைய-யானைக்கும் சேனைக்கும் போர் எனவரும். நீயும் நின்படைக் கலமுஞ் சாறீர். அவனும் அவன் படைக்கலமும் சாலும் என ஏனையிடத்தும் வருமால் எனின், முன்னிலைவினை இருதிணைக்கும் பொதுவாகலினானும், படர்க்கை வினைக்கட் ‘செய்யும்’ என்னும் முற்றுச் சொல் இருதிணைக்கும் பொதுவாய் வருதலானும் அவை ஆண்டு அடங்குமென்க. (41)
|