தொகைச் சொற்கள் ஒருசொல் தன்மைய

415.எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய.

தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல் நடைய, எ-று.

என்பது என்சொன்னவாறோவெனின், இரண்டு சொல்லாகி ஒட்டுப்பட்ட பெயர் பிரிந்து நில்லாது ஒரு பெயர் மாத்திரமாகி நிற்கும் என்றவாறு.

எ - டு. யானைக்கோடு கிடந்தது, துடியிடை நன்று, கொல் யானை யோடிற்று, கருங்குதிரை வந்தது, கழஞ்சரை குறைந்தது. பொற்றொடி வந்தாள் என எழுவாயும், பயனிலையுமாகியும்; யானைக்கோட்டை, துடி

யிடையை, கொல்யானையை, கருங்குதிரையை, உவாப் பதினான்கை. கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் ஒரு சொன்னடையவாகி வந்தவாறு கண்டு கொள்க.

(23)