எய்திய தொருமருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். உம்மைத் தொகையுள், உயர்திணைப் பொருண்மேல் வரும் உம்மைத்தொகை பல சொன்னடைத்தாகித் தொடரவும் பெறும், எ - று.
எ - டு. கபில பரணர் வந்தார்.
அஃதேல், ஒட்டுப்பெயர் ஒரு சொன்னடைத்து என்றல் அமையாது, பல சொன்னடைத்தாகியுஞ் சில சொல் வருதலின் எனின், ஆண்டும் ஒரு சொன்னடைத்தென்பதே கருத்து. ஒருவர் என்பது பன்மை வினை கொண்டு முடிந்தாற் போல. உயர்திணை ஒட்டுப்பெயர் பன்மை வினை கொண்டு முடியுமெனச் சொன் முடிவு நோக்கிக் கூறினாரென்க.
(24)