இசை நிறையடுக்கி நிற்கும் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இசைப் பொருட்கண் அடுக்கிவருஞ் சொல்லிற்கு எல்லை நான்கு, எ - று. எ - டு.‘ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும், விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும், குளக்கொட்டிப் பூவினிறம்.” இதனுள் ஒக்கும் என்னும் சொல் இசை நிறைக்கண் நான்கு வரம்பாகி வந்தவாறு கண்டுகொள்க. (27)
|