ஒருவன் ஒருத்தி பற்றிய மரபு

42.

ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது.

உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை நிகழுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ஒருமை யெண்ணின் பொதுமையாகிய ஒருவர் என்னும் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன், ஒருத்தியென்னுஞ் சொல் அவ்வொருமைக் கல்லது எண்ணு முறைக்கண் ணோடாது, எ - று.

எனவே, எண்ணுமுறைக்கண் ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் ஒருவர், இருவர் மூவர் என எண்ணினல்லது பால்தோன்ற எண்ணப் படாது என்றவாறாம்.

(42)