அசை நிலையடுக்கு

421.கண்டீர் என்றா 1கேட்டீர் என்றா
சென்ற தென்றா போயிற் றென்றா
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி
2யிசைக்குங் கிளவி என்ப.

இதுவும் ஒருசார் அசைநிலை யாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். கண்டீர் என்பது முதலாக ஓதப்பட்ட சொற்கள் வினாப்பொருள் உணர்த்துஞ் சொல்லொடு கூடிநின்றவழி, அப்பொருணிலையிசைக்கும் சொல்லாம், எ - று.

எனவே சொற்களோடு கூடாதவழி அசைநிலையா மென்றவாறாம்.

எ - டு.3வினாவொடு கூடுதலாவது:-- கண்டீரோ கண்டீரோ என ............கண்டீரென்ப...........

இனி, அவை அசைநிலையாகி வருமாறு:--“படைவிடுவான் மற்கண்டீர், காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின்” 4என்பதனுள்,கண்டீர் என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவற்றிற்கு உதாரணம் வந்துழிக் கண்டு கொள்க.

(29)


1. கொண்டீர் எனப் பாடம் கொள்வர் இளம்பூரணரும் சேனாவரையரும். கேட்டீர் எனப் பாடங் கொள்வர் நச்சினார்க்கினியர்.

2. அசைக்கும் எனப் பாடங்கொள்வர் சேனாவரையரும், நச்சினார்க் கினியரும்.

3. இப்பகுதி சிதைந்து காணப்படுகிறது.

4. முல்லைக்கலி-9.