இதுவும் அது
இ - ள். இந்நான்கு சொல்லும் முன்னிலை வினைச் சொல்லல் வழி, அசை நிலையாகும், எ - று.
எ - டு. 2“மோரொடுவந்தா டகைகண்டை யாரொடுஞ் சொல்லியாளன்றே வனப்பு” என்றவழிக் கண்டை என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க.
(30)
1. இச் சூத்திரத்திற்குப்பின் இவ்வுரையின் வினையியலிலுள்ள 243, 244, 245 ஆம் எண் சூத்திரங்கள் பிற உரைப்பதிப்புக்களிற் காணப்படுகின்றன.
2. முல்லைக்கலி-9.